அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 74 வய­தான பெண்ணும் 27 வய­தான இளை­ஞரும் திரு­மணம் செய்வதாக தெரி­விப்பு

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 74 வய­தான பெண்ணும் 27 வய­தான இளை­ஞரும் திரு­மணம் செய்­து­கொள்ளப் போவ­தாக தெரி­வித்­துள்­ளனர்.

கெத்தி ஜேன்கின்ஸ் எனும் இப்பெண் டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்­தவர். இவர் கடந்த வருடம் டெவோன் அவ்­பிறே எனும் டெக்ஸாஸ் இளை­ஞரை இணை­யத்­தளம் ஒன்றின் மூலம் சந்­தித்தார்.

தற்­போது,  27 வய­தான டெவோன் அவ்­பி­றேவும் 74 வய­தான கெத்தி ஜேன்­கின்ஸும் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் செய்­துள்­ளனர். விரைவில் திரு­மணம் செய்­து­கொள்­ள­வுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

தமக்­கி­டை­யி­லான 47 வருட வயது வித்­தி­யா­சத்தை தாம் பொருட்­ப­டுத்­த­வில்லை என்­கின்­றனர்.

இவர்கள்  2 மணித்­தி­யால பயணத் தூரத்­தி­லேயே வசித்­தனர். எனினும் நேரில் சந்­திப்­ப­தற்கு முதல் 4 மாதங்கள் இவர்கள் இணையம், தொலை­பேசி மூல­மா­கவே உரை­யாடி வந்­த­னராம்.

அக்­கா­லத்தில் கொவிட்19 நோயினால் கெத்தி பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் தனக்கு வாகனப் பிரச்­சினை இருந்­த­மையும் இதற்கு காரணம் என்­கிறார் டெவோன்.

கெத்தி இதற்­குமுன் ஒரு­போதும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திரு­மணம் செய்­து­கொள்­ள­வில்லை. ஆனால், அவ­ருக்கு 4 பிள்­ளைகள் 13 பேரப்­பிள்­ளைகள். 36 பூட்­டப்­பிள்­ளைகள், ஒரு கொள்­ளுப்­பேரன் ஆகியோர் உள்­ளனர்.

டெவோன் 24 வயதில் ஒரு பெண்ணை திரு­மணம் செய்­தி­ருந்தார். 2021 ஆம் ஆண்டு கெத்­தியை சந்­திப்­ப­தற்கு முன் விவ­கா­ரத்து செய்தார். அவ­ருக்கு பிள்­ளைகள் இல்லை.

தமக்­கி­டை­யி­லான உற­வுபோல் வேறு உற­வுகள் இல்லை என்­கிறார் டெவோன்.

தான் திரு­மணம் செய்­யப்­போகும் பெண் மிக வய­தா­னவர் என தனது குடும்­பத்­தி­ன­ரிடம் கூறி­ய­போது தான் பொய் கூறு­வ­தாக அவர்கள் எண்­ணிய போதிலும் பின்னர் இத்­தி­ரு­ம­ணத்­துக்கு அவர்கள் ஆத­ர­வாக உள்­ளனர் என டெவோன் கூறு­கிறார்.

கெத்தி குறித்து டெவோன் மேலும் கூறு­கையில், 

“கெத்தி அழ­கான முகத்­தையும் கவர்ச்­சி­யான உட­லையும் கொண்­டவர். அவரின் கண்கள் வசீ­க­ர­மா­னவை. ஆவரின் பாதங்­களும் அழ­கா­னவை. அதிக நகைச்­சு­வைகள் அவ­ருக்குத் தெரியும். அழ­காக பாடுவார். எனது பாட்­டியை நினை­வு­ப­டுத்தும் பல பாடல்­களை கெத்தி அறிவார்.  எனது பாட்டி விரும்­பிய பல கலை­ஞர்­க­ளையும் கெத்தி அறிந்­துள்ளார்” எனத் தெரி­வித்­துள்ளார்.

“கெத்தி குறித்து எனது வேலைத்­த­ளத்­திலும் நான் பெரு­மை­யாகக் கூறுவேன். அவரின் புகைப்­ப­டங்­க­ளையும் காண்­பிப்­பிபேன்” என்­கிறார் டெவோன்.

இந்த வயது வித்­தி­யா­சத்தை கருத்­திற்­கொள்ளும் சிலர், கெத்தி ஒரு செல்­வந்தர் எனவும், அவரின் பணம் முழு­வ­தையும் நான் எடுத்­துக்­கொள்ள முற்­ப­டு­வ­தா­கவும் எண்­ணு­கி­றார்கள். ஆனால், அது அப்படியல்ல’ எனவும் டெவோன் கூறுகிறார்.

இதேவேளை, தனது வாழ்க்கையில் முன்னர் இருந்தவற்றைவிட இதுவே மிகச் சிறந்த உறவு. இதற்கு மன் இந்தளவு முழுமையாக நான் நேசிக்கப்பட்டதில்லை என்கிறார் கெத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்