அமெரிக்காவில் 4 கோடியை கடந்த நோயாளர்கள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.57 லட்சத்தைக் கடந்துள்ளது.


உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் டெல்டா, அல்பா போன்ற திரிபுகளின் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.09 கோடியைத் தாண்டியுள்ளது என அமெரிக்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்