அபிமன்யூ ஈஸ்வரனை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய என்ன காரணம்?

அபிமன்யு ஈஸ்வரனை இந்திய டெஸ்ட் அணியில் தெரிவு செய்ய என்ன காரணம் – பின்னணி இதோ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியானது கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜாஸ்பிரித் பும்ரா என இந்திய அணியின் முன்னனி வீரர்கள், 20 பேர் கொண்ட பட்டியிலில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியுடன் மேலும் நான்கு கூடுதல் வீரர்களான, பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வஸ்வாலா மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் இங்கிலாந்துக்கு செல்லவிருக்கின்றனர். கூடுதல் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள பிரசித் கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ஐபிஎல் தொடர்களில் பங்கு பெற்றதால் அவர்களைப் பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரியும் ஆனால் மற்ற இரண்டு வீரர்களான அர்சான் நக்வஸ்வாலா மற்றும் அபிமன்யு ஈஸ்வரனைப் பற்றி யாருக்கும் பெரியளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . இந்த இருவரில் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு தான் கூடுதல் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

25 வயதாகும் வலது கை துவக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன், டேராடூனில் பிறந்து மேற்கு வங்காளத்திற்காக ரச்ஞி ட்ராபி முதலிய உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்திருக்கிறார். 2018-2019ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ரஞ்சி ட்ராபியில் அனைவரும் வியக்கும் வண்ணம் விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், அத்தொடரில் 6 போட்டிகளில் மட்டும் விளையாடி 861 ரன்கள் அடித்து அசத்தினார். அத்தொடரில் அவருடைய சராசரி 95.66 ஆகும். இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி ட்ராபியில் பெங்கால் அணியை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.2019-2020ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி போட்டியில் சிறப்பாக பேட்டிங் விளையாடதபோதும், பெங்கால் அணியை தனது அற்புதமான கேப்டன்சியின் மூலம் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார் அபிமன்யு ஈஸ்வரன். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டே நடைபெற்ற துலீப் ட்ராபியில் இந்தியா ரெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அத்தொடரின் இறுதியாட்டத்தில், இந்தியா கிரீன் அணிக்கு எதிராக 153 ரன்கள் அடித்து அசத்திய ஈஸ்வரினின் மீது என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்