அனைத்து மதுக்கடைளையும் மூடுக! திணைக்களம் உத்தரவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

வழமான நாடு பாதுகாப்பான தேசம் என்னும் தொனிப் பொருளிலில் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முகநூலில் நாம்