அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என தகவல்

அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை என தகவல்கள் வௌியாகியுள்ளன.

Kelanitissa Combined Circles அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு போதுமான எண்ணெய் வழங்கப்படவில்லை என, நியூஸ்பெஸ்ட் வினவிய போது இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, களனிதிஸ்ஸ சியட் மின் நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு மேலாக டீசல் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சப்புகஸ்கந்த, பத்தல மற்றும் கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்