
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் அடுத்த மாதம் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது, அதற்கான வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றது.
தற்போது இவர் குறித்து கானா பாடல் பாடி புகழ்பெற்ற பாலசந்தர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில் அவரிடம் விஜய்யிடம் பேசும் வாய்ப்பு கிடைத்ததா? என்ன பேசினிர்கள்? என்று தொகுப்பாளார் கேட்டார்.
அதற்கு பாலசந்தர் ‘விஜய் அண்ணா நிறைய வடசென்னை களத்தை கொண்ட படங்களை பார்த்துவிட்டு நன்றாக இருக்கு என்பார்.
நான் உடனே மறுத்து “அண்ணா அதில் எங்களை தவறாக காட்டியுள்ளார்கள்” என்பேன், அதற்கு விஜய் அண்ணாவும் சித்துக்கொண்டே “ஆமாப்ப, அவுங்க அப்படித்தான் படம் எடுப்பார்கள்.
ஆனால், எனக்கு வடசென்னை பகுதியில் பல நண்பர்கள் இருக்காங்க’ என்று கூறியதாக பாலசந்தர் தெரிவித்துள்ளார்.