அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 110 ஆவது மைல் கல் பகுதிக்கு அருகில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கொட்டாவை – மாக்கம்புற பகுதியிலிருந்து, ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த ஹம்பாந்தோட்டை பேருந்துசாலைக்கு சொந்தமான பேருந்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்