அதிமுக.வில் போட்டியிடும் நகைச்சுவை நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான ரவி மரியா சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆசை ஆசையாய், மிளகா போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி மரியா. ஆனால் இயக்கத்தில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இலலாததால், நடிப்பில் கவனம் செலுத்தினார். ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இந்நிலையில் வரும் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்