அதிபரை நியமிக்க பெற்றோர் கோரிக்கை!

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயத்திற்கு அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த ஜனவரி மாதத்தில் இப்பாடசாலையின் அதிபர் இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

துணுக்காய் கல்வி வலயத்தில் அதிபர் இல்லாத பாடசாலைகளுக்கு வடமாகாண கல்வி திணைக்களத்தினால் அதிபர்கள் நியமிக்கப்பட்ட போதும், அதிபர்கள் பணியினை பொறுப்பேற்பதில்லை எனவும், இதற்கான முக்கிய காரணமாக போக்குவரத்து வசதிகள் இல்லாமை சுட்டிக் காட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர் தரத்துடன் உள்ளவர்களை அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு அதிபர்களாக நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்