
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் இரு வருடங்களாக அதிபர் இல்லை எனவும் உடனடியாக அதிபரை நியமிக்கக் கோரியும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை பாடசாலை முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பழைய மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.