அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் முகத்திரைகள்

கொறோனா வைரஸ் சீன நாட்டவர்களினால் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்கள் அதிகமாக முகதிரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் நேற்றைய தினம் இலங்கையில் கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் முகத்திரையை பயன்படுத்துவது தொடர்ந்தும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

இதனால் நாட்டின் பெரும்பாலன மருந்தகங்களில் முகத்திரைகள் விரைவாக விற்பனையாவதாக அவற்றின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தற்போது காணப்படும் அதிக கேள்வியால் முகத்திரைகள், சில மருந்தகங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முகநூலில் நாம்