அதிக காலம் கிரீடம் சூடியவர்: வரலாற்றில் இடம்பிடித்தார் இரண்டாம் எலிசபெத் மகாராணி

உலகில் அதிக காலம் கிரீடம் சூடிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் மகாராணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

அவர் கிரீடம் தரித்து இன்றுடன் 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இரண்டாம் எலிசபெத் மாகாராணியார் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி தனது 25 ஆவது வயதில் கிரீடம் சூடினார்.

அவரது தந்தையான ஆறாவது ஜோர்ஜ் மன்னர் 1952 ஆம் ஆண்டு மரணித்ததன் பின்னர் பிரித்தானிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் தெரிவானார்.

அவர் மாகாராணியாக தெரிவாகி இன்றுடன் 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரித்தானியாவில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மாகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பின்னர் அதற்கான வைபவம் ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்