அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது

திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு
செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த
தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்துள்ளார்.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக
நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

46 திட்ட அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களின் கீழ் இயங்க வேண்டும்
என்றும், இது தொடர்பான குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டதாகவும்
அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய 55 அலுவலகங்களும் மூடப்படுமா என்பது
தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இதற்கு ஜனாதிபதி தனது
இணக்கத்தை தெரிவித்துள்ளார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த அலுவலகங்களில் ஆலோசகர்கள் உட்பட பாரியளவிலான ஊழியர்கள் உயர்
சம்பள மட்டங்களுக்கு அமைய உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல
குணவர்தன மேலும் தெரிவித்துள்ளா்.

நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பெரிய
திட்ட அலுவலகங்களை பராமரிக்க முடியாத நிலையில், குழுவொன்றை நியமித்து
அந்த திட்ட அலுவலகங்களை மதிப்பீடு செய்ய ஜனாதிபதி அண்மையில்
தீர்மானித்திருந்தார்.

முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில்
ஜனாதிபதியினால் இதுதொடர்பான குழு நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்