அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து – 6 பேர் பலி – 3 பேர் படுகாயம்

தென்னிலங்கையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர். லுனுகம்வெஹேர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் பயணித்த வேன் ஒன்று மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முகநூலில் நாம்