அதிகவருமானம் தரும் தரப்போகும் மன்னார் எரிவாயு வளம்

மன்னார் கடற்பரப்பில் உள்ள 26 ஆயிரத்து 700கோடி டொலர் பெறுமதியான எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தினால் நாட்டின் மொத்தக்கடன் தொகையைப் போன்று மூன்று மடங்கு வருமானத்தைப் பெற முடியும் என்று வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகல்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர் களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 13 ஆயிரத்து 350 கோடி டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும் அது நாட்டின் மொத்த கடன் தொகையான 4 ஆயிரத்து 700 கோடி டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத் துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.


இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த நடவடிக்கை களை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி பாராளுமன்றத் துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயு வினால் மாத்திரம் நுரைச்சோலை மின் சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயல்படுத்த முடியும் எனவும் அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம் சப்பு கஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலை யத்தை 143 வருடங்களுக்கு செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்