அதிகரித்த ஆதனவரிக்கு எதிரான போராட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் அறவிப்பட்டு வருகின்ற அதிகரித்த
ஆதன வரிக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருந்து மாபெரும் மக்கள்  போராட்டம்
பிற்போடப்பட்டுள்ளது எனவும் மீண்டும் நடைபெறவுள்ள  திகதி அறிவிக்கப்படும்
எனவும்  சமத்துவக் கட்சி அனுப்பிய செய்திக்குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக் கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி
டிப்போச்  சந்திக்கருகில் கரைச்சி பிரதேச சபையின் அதிகரித்த ஆதன வரிச்
சுமைக்கு எதிராக மக்கள ் போராட்டம் ஒன்றை சமத்துவக் கட்சி ஏற்பாடு
செய்திருந்தது.  ஆனால் தற்போது கிளிநொச்சி உட்பட வடக்கில் உள்ள
மாவட்டங்களில்  போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எதுவும் நடத்த
முடியாது என நீதிமன்றங்களில்  பொலீஸார் பெற்ற தடையுத்தரவுக்கு அமைவாக ஆதன
வரிக்கு எதிரான போராட்டத்தையும் நடாத்த முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது
எனவும்.  இதனால் குறித்த போராட்டம் பிரிதொரு தினத்தில் இடம்பெறும் எனவும்
அத் திகதி அனைவருக்கும் அறிவிக்கப்படும் எனறும் சமத்துவக் கட்சி அனுப்பி
வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்