
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 03 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதி அரச விடுமுறை தினங்களாக கணக்கிடப்படாது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையானது சனநெரிசல் மிக்க பகுதிகளில் நடமாடுவதை தடுக்கும் நோக்கிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நோக்கிலும் இந்த கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.