

மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டத்திற்காக அதானி குழுமத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பம்பலப்பிட்டியில் ஆரம்பமான எதிர்ப்பு நடவடிக்கையில் கோட்டாகோகம போராட்டக்காரர்களும் இணைந்திருந்தனர்.
நாட்டிற்கு பாதகமான உடன்படிக்கைகள் ஊடாக பெறுமதியான வளங்களை விற்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாகக் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
களுத்துறையில் இன்று எரிபொருள் வரிசையில் உயிரிழந்தவரை நினைவுகூர்ந்த போராட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அங்கிருந்து கோட்டாகோகமவிற்கு சென்றவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முடித்துக்கொண்டனர்.