அட்லீயின் அட்டுத்தப்படம் இவருடன் தான், வெளிவந்த சூப்பர் அப்டேட்

அட்லீ தமிழ் சினிமாவில் ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, மெர்சல், பிகில் அகிய படங்கள் மெகா ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து அட்லீ தற்போது யாருடன் கூட்டணி வைக்க போகின்றார் என்பதே எல்லொரின் எதிர்ப்பார்ப்பும்.

அந்த அளவிற்கு அவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டையகிளப்பி வந்தது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது கொரோனா வைரஸால் அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அட்லீ-ஷாருக்கான் படம் அடுத்த மாதம் தொடங்குவதில் இருந்து தள்ளி சென்றுள்ளதாக தெரிகின்றது.

அதே நேரத்தில் அட்லீ ஷாருக்கானுடன் படம் செய்வது உறுதி என்றே எல்லோராலும் கூறப்பட்டு வருகின்றது.

அட்லீக்கு கண்டிப்பாக இது விஸ்வரூப வளர்ச்சியாக தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

முகநூலில் நாம்