அட்லீயின் அடுத்தப்படத்தின் ஷுட்டிங் அப்டேட்- முழு விவரம்

அட்லீ தமிழ் சினிமாவில் ஷங்கர், முருகதாஸிற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கும் இயக்குனர். இவர் இதுவரை 4 படங்கள் எடுத்துள்ளார்.

இந்த 4 படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றுள்ளது, இதில் பிகில் படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இதன் மூலம் அட்லீ மார்க்கெட் பல மடங்கு உச்சத்திற்கு சென்றுள்ளது, ஏனெனில் ஷங்கருக்கு பிறகு இத்தனை கோடி வசூல் தந்த இயக்குனர் அட்லீ என்பதால்.

இந்நிலையில் அட்லீ அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்று பெரிய விவாதமே நடந்தது.

தற்போது நமக்கு கிடைத்த தலவல்படி அட்லீ பாலிவுட் செல்வது உறுதி, அங்கு நடிகர் ஷாருக்கானை அவர் இயக்கவுள்ளார் என்று செய்திகள் கிடைத்துள்ளது.

அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அட்லீ தயாரிப்பாளருக்கு அதிக செலவை இழுத்துவிடுகின்றார், அவர் பல படங்களிலிருந்து காட்சிகளை காப்பியடிக்கின்றார் என்று கோலிவுட்டில் உள்ள சில தயாரிப்பாளார்களே குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்