அடுத்தடுத்து வான்வெளித் தாக்குதல்கள்! நொடிப் பொழுதில் பல வீரர்கள் பலி – மீண்டும் உச்சக்கட்ட போர்ப் பதற்றம்

துருக்கியின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சிரிய நிலைகளை குறிவைத்து துருக்கி நடத்திய தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கடைசி இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரிய அரசு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சிரிய அரசு படையினருக்கு ரஷியா ஆதரவு அளித்துவருகிறது. ஆனால், போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது. சிரிய எல்லைக்குள் துருக்கி தனது படைகளை குவித்து வைத்துள்ளது.

துருக்கியின் இந்த நடவடிக்கைகளால் உள்நாட்டில் தொடங்கிய இந்த சண்டை தற்போது சிரியா-துருக்கி இடையே போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷிய கூட்டுப்படைகள் நேற்று அதிரடியாக வான்வெளி தாக்குதல்கள் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இட்லிப் மாகாணத்தில் உள்ள சிரிய படையினரின் நிலைகளை குறிவைத்து துருக்கி இன்று வான்வெளி உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் சிரிய அரசு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்