அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்! பல வீரர்கள் பலி- 100 டாங்கிகள் அழிப்பு- உச்சகட்ட போர் பதற்றம்

துருக்கிப் படைகளுக்கும் சிரியாவிற்கும் இடையில் மூண்டிருக்கும் போர் பதற்றத்தின் நடுவே இரண்டு சிரிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதுடன், 100 டாங்கிகளை அழிக்கப்பட்டுள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா கூட்டுப்படைகளுடன் சேர்ந்து சிரியா நடத்திய வான்வழி தாக்குதலில் 34 துருக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், இதற்கிடையில், துருக்கி நடத்திய தாக்குதலில் இரண்டு சிரிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு. 100 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆறு வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டிருப்பதாக, துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை ‘Spring Shield’ என்கிற பெயரில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே மூன்று ரஷ்ய ஊடகவியலாளர்கள் இஸ்தான்புல்லில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவுடனான துருக்கியின் உறவும் இன்று வலுவிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்