அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு வெள்ளவத்தை விவேகானந்தா வீதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர், நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் பெயிண்டராக பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நான்காவது மாடி படிக்கட்டிலிருந்து முதல் மாடியில் விழுந்ததாகக் கூறப்படுவதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்