
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும் வலியுறுத்தி இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். எவ்வகையான தடைகள்விதிக்கப்பட்டாலும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றுஎதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.மக்களுக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எவ்வித பயங்கரவாதசெயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. மாறாக மே 9 ஆம் திகதி கோட்டா கோ கமமற்றும் மைனா கோ கம போராட்டங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களேபயங்கரவாதிகள் என்றும், அவர்களே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள்என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமைஅடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில்கையொப்பமிடும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயேஎதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.