அஜித்தே விரும்பி கேட்டும் நடிக்க மறுத்த நடிகை, பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன், சுவாரஸ்ய தகவல்

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். அவருடன் இணைந்து நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர், அப்படியிருக்க அவருடன் நடிக்க முடியாமல் போனது குறித்து குணச்சித்திர நடிகை சுதா மனம் திறந்து பேசியுள்ளார்.

இவர் அஜித்தின் வேதாளம் படத்தில் தம்பி ராமையாவின் மனைவியாக நடித்திருந்தவர், இவர் சிட்டிசன் படத்திலேயே நடிக்கவிருந்ததாம்.

அதுவும் அஜித்தே இவர் இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்டும், அவரால் அந்த படத்தில் கால்ஷிட் பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனதாம்.

ஆனால், எப்படியாவது அஜித்துடன் நடித்துவிடவேண்டும் என்று அவர் காத்திருக்க, வேதாளம் படத்தில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்போது அஜித் செட்டிற்குள் உள்ளே வந்தவுடன் வேகவேகமாக ஓடி வந்து ‘அம்மா உங்களுடன் நடிப்பது சந்தோஷமாக உள்ளது’ என்று கூறி நெகிழ வைத்துவிட்டாராம்.

ஒரு சிலரை பார்த்தால் தான் தானாக மரியாதை வரும், அப்படி ஒருவர் தான் அஜித் என சுதா கூறியுள்ளார்.

முகநூலில் நாம்