அஜித்திற்கு நடிகர் விவேக் விட்ட சவால், தல செய்வாரா?

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள் உள்ள படமாக தயாராகி கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் அஜித்துடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் விவேக், கடைசியாக விஸ்வாசம் படத்தில் கூட நடித்து அசத்தியிருந்தார்.

இவர் நடிப்பில் இந்த வாரம் தாராள பிரபு என்ற படம் திரைக்கு வந்துள்ளது, இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அதில் இவரிடம் ‘ஒரு பிரபலத்திற்கு சவால் விட வேண்டும், என்றால் யாருக்கு?’ என்று கேட்டனர்.

அதற்கு விவேக் ‘அஜித் அவர்களுக்கு ஒரு சவால், அவர் தன்னுடைய ரசிகர்களை நிறைய மரம் நட சொல்ல வேண்டும்’ என்று ஆக்கப்பூர்வமான சவால் விட்டார்.

முகநூலில் நாம்