அஜித்தின் கடைசி 10 படங்களின் வசூல் நிலவரம் முழுவதும், மொத்தம் எத்தனை கோடிகள் தெரியுமா? இதோ

அஜித் இன்று தமிழகமே கொண்டாடும் தல. ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பட்ட கஷ்டங்கள் நிறைய உள்ளது. இந்நிலையில் அஜித் மங்காத்தா படத்திற்கு பிறகு தன் திரைப்பயணத்தில் சீரான ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார் என்றால் மிகையல்ல.

அந்த வகையில் அஜித்தின் கடைசி 10 படங்களை எடுத்துக்கொண்டு அதன் வசூல் விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம், இதில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்த படம் கணக்கில் எடுத்துக்கொள்ளபடவில்லை.

  • நேர்கொண்ட பார்வை- உலகம் முழுவதும் ரூ 107 கோடி, தமிழகம்- ரூ 70 கோடி
  • விஸ்வாசம்- உலகம் முழுவதும் ரூ 183 கோடி, தமிழகம்- ரூ 126 கோடி
  • விவேகம்- உலகம் முழுவதும் ரூ 127 கோடி, தமிழகம்- ரூ 70 கோடி
  • வேதாளம்- உலகம் முழுவதும் ரூ 122 கோடி, தமிழகம்- ரூ 76 கோடி
  • என்னை அறிந்தால்- உலகம் முழுவதும் ரூ 90 கோடி, தமிழகம்- ரூ 50 கோடி
  • வீரம்- உலகம் முழுவதும் ரூ 80 கோடி, தமிழகம் ரூ 52 கோடி
  • ஆரம்பம்- உலகம் முழுவதும் ரூ 95 கோடி, தமிழகம் ரூ 55 கோடி
  • பில்லா2- உலகம் முழுவதும் ரூ 55 கோடி, தமிழகம் ரூ 34 கோடி
  • மங்காத்தா- உலகம் முழுவதும் ரூ 75 கோடி, தமிழகம் ரூ 50 கோடி
  • அசல்- இந்த படம் சரியான வசூல் நிலவரம் இல்லை, ஆனால், முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ 18 கோடி வசூல் செய்திருந்தது, அதை வைத்து பார்த்தால் மொத்தம் ரூ 25 கோடி வசூல் செய்திருக்கும்.

இதை வைத்து பார்க்கையில் அஜித் மங்காத்தாவிற்கு பிறகு நாம் சொன்னது போல் சீரான வசூலையும், ஹிட்டையும் கொடுத்து வருகின்றார் என தெரிகின்றது.

முகநூலில் நாம்