அசாதாரன சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க நடவடிக்கை – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

நாட்டில்கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மேற்கொள்ளபட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நாளாந்தம் கூலி தொழில்  செய்து வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய  கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் வேலை செய்து வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பில்  தான் அரசின் உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அவர்கள் மாவட்ட அரச அதிபருக்கு ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.  அதற்கான விபரங்கள் கிராம அலுவலர் ஊடாக பெறப்பட்டு  உலருணவு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்