அசாதாரண சூழ்நிலை – 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வடக்கில் பாதிப்பு!

புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு இதுவரை அனர்த்தங்களில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 21 ஆயிரத்து 884 குடும்பங்களை சேர்ந்த 72 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 841 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 66 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 42 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 111 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயித்து 841 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

66 வீடுகள் முழுமையாகவும் 2 ஆயிரத்து 886 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை தவிர்த்து, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடமாகாண மாவட்டங்களிலும் திருகோணமலை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அசாதாரண காலநிலை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மாவட்டங்களில் 67 வீடுகள் முழமையாகவும் 3 ஆயிரத்து 167 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்